Thursday 11 June 2015

ஏலகிரி 2015

இன்று  எனக்கும் சங்கர்  கணேஷ் க்கும் HOSUR இல்  interview இருந்தது . நான் என்னுடைய  யமஹா பைக்கில் கிளம்பி சுமார் 10 மணி அளவில் அங்கு சென்றோம் .போனஉடனே தெரிந்தது இது வெறும் கண்துடைப்புக்காக நடத்தப்படும் நேர்காணல் என்று . சரி அங்கிருந்து  ஏலகிரி மலைக்கு செல்லலாமென  முடிவு செய்து சுமார் 12.45 அளவில் கிளம்பினோம். சங்கர் பைக்கை ஓட்டினான் . சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் 110KM  தொலைவில் ஏலகிரி அமைந்துள்ளது.
highwayயில்  உள்ள பெட்ரோல் பங்கில் 500 க்கு பெட்ரோல் போட்டுவிட்டு கிளம்பினோம். மணிக்கு 90KM  வேகத்தில்  சென்றோம். சரியாக 2.00 மணிக்கு கிருஷ்ணகிரி வாணியம்பாடி highwaysஇல்  ஒரு சின்ன பிரேக், அப்புறம் 2.45 மணிக்கு ஏலகிரி மலை அடிவாரதிற்கு வந்தோம். இந்த ஏலகிரி மலை வழி சாலை ஆனது நாம் highways வரும் போதே பார்க்கலாம். மொத்தம் 16 கொண்டை ஊசி வளைவுகள்.மெதுவாக 

  மலை மீது ஏற தொடங்கினோம். 5 கொண்டை ஊசி வளைவுகள் தாண்டியதுமே எங்களுக்கு முன்னாடியும்  பின்னாடியும் பைக்ல் FIGUREஐ வைத்து கொண்டு ROYAL ENFIELD ல் மூன்று பேர் வந்தனர். இவர்களை போல் நிறைய ஜோடிகளை வழிஎங்கும் காண முடிந்தது. கொடுத்து வச்சவங்க. அந்த மலைலேயே professional டிரஸ்ல shoeவோட மொட்ட பசங்களா வந்தது அந்த districtலயே நாங்க தான் !!.
16 கொண்டை ஊசி வளைவுகளையும் தாண்டுன உடனே  climate change . அப்படியே பெங்களூர் climate. ஊரும் நல்ல பசுமையாக  இருந்தது.
போன உடன் நல்ல பசி. அங்க இருக்குற ஒரு சின்ன ஹோட்டல்ல  ஒரு மீன்வாங்கி சாப்டோம். அப்புறமா அங்க ட்ரெக்கிங் செய்வதற்கு  ஒரு ஏரியா இருக்கிறது  என  வண்டிய கிளப்பி கொண்டு சென்றோம்
பெரிதாக ஒன்றும்   இல்ல. அப்படியே மறுபடியும் circleகே வாபஸ் வந்தோம். அங்க இருக்குறதே ஒரு children s பார்க், சின்ன ஏரி (செயற்கை) அப்புறம் natural ஏரி. அஷடே!!பிறகு அங்கிருந்து 5.00 மணி அளவில் கிளம்பி 7.30 மணிக்கு பெங்களூர் வந்தோம். ஏலகிரி மலை ஆனது வேலூர் & ஆம்பூர் மக்கள்காண சிறிய மலைவாச்தலம். சுற்றி பார்பதற்கு அங்கு ஒன்னும் இல்லை. பெங்களூர்ஐ சுற்றியே  நிறைய இடம் இருக்கிறது. இங்கிருந்து கிளம்பி ஏலகிரி போக வேண்டும் என நிர்பந்தம் இல்லை.

No comments:

Post a Comment