Monday 8 June 2015

Trip to Chennai June 2015

June 2015:


நீண்ட நாட்களாக பிளான் செய்து இந்த வாரம் தான் சென்னை செல்லும் வாய்பு  கிட்டியது .அதுவும் விவேக்கின் கல்யாணத்திற்கு பிறகு நான் செல்வதால் ஒரு வித எதிர்பார்ப்புடன் சென்றேன். ஜூன் 5 ஆம் தேதி பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ல் கிளம்பி அவனுக்கு பிடித்த சரக்கை வாங்கி கொண்டு ஒரு வித பயத்துடனே ரயில் ஏறினேன் . பயணம் மிக  சுமாராகவே இருந்தது. எப்பட சென்னை வரும் என வெயிட் செய்து ஒரு valiyaha சென்னை வந்து சேர்த்தேன் 

thiruvanmyur இருந்து vivek என்னை கூட்டி கொண்டு சென்றான்.பாலவாக்கத்தில் கடற்கரை ஒட்டி அவன் வீடு இருந்தது. நல்ல பெரிய வீடு.பார்த்த மாத்திரத்தில் எனக்கு ரொம்ப  பிடித்து இருந்தது . பையன் நல்லாவே வச்சு இருக்கான்.
கணேஷ் பாவா வேறு வந்திருந்தர். அவரை நான் எதிர்பார்கவில்லை. ஆரம்பத்தில் எனக்கு கொஞ்சம் ஏமாற்றம் இருந்தது அப்புறம் கொஞ்சம் சரக்கு அடிச்சா சரியாய் போய்டும்னு விட்டுட்டேன் .

இரவு 10.30 மணி அளவில் எங்களோட கச்சேரிய ஆரம்பிச்சோம்.  ஹரியாலி கபாப் சைடு டிஷு அப்புறம் தோசை வெங்காய சட்னி  உடன் dinner. மேனகா நல்ல சமைச்சு  இருந்தாங்க . பொடி  தோசைக்கும் கார சட்னிக்கும் செம்ம combination . ஒரு விழுது எடுத்து வாயில வச்ச வாவ் divine . நிஜமாவே பொடி தோசை, முட்டை தோசைனு  வித விதமா செஞ்சாங்க. இவ்ளோ பொறுமையா ராத்திரி 12 மணிக்கு மேல பண்ணனும்னா   really ஒரு சஹிப்பு தன்மையும் பொறுமையும் வேணும் . அது அவங்க கிட்ட நெறையவே இருக்கு. விவேக் நிஜமா ரொம்ப கொடுத்து வச்சவன்.  எல்லாத்துக்கும் மேல ஒரு நல்ல புரிதல் இல்லனா இது  சத்தியமா சாத்தியம் இல்ல .. bro am very happy to you both .

என்னதான் அன்னிக்கு நல்லா சரக்கு அடிச்சாலும் என்னால விவேக் கூட  வழக்கமா  ப்ரீ யா பேசுற அந்த wave length வரல. பாவா இருந்ததால கொஞ்சம் அடக்கியே இருந்தேன். ஒரு வழியா அன்னிக்கு ஒரு பூஜைய pothutu மட்டை ஆனோம்.

மறுநாள் சங்கீதாவும் பாவாவும் வெளியில கிளம்ப அன்னிக்கி நானும் விவேக்க்கும் மட்டும் நிதானமா எந்திருச்சு கறி வாங்கிட்டு வந்தோம் . என்னோட விருப்பபடி மேனகா சிக்கன் 65யும் குழம்பும் வச்சாங்க . அவங்க சமைக்கிற கேப்ல நாங்க ரெண்டு பெரும் கணேஷ் பாவாக்கு குலோப்ஜாமூன் பிடிக்கும்ன்னு (Oru பிட் ) சொல்லிட்டு வாங்க போனோம். பக்கதுல இருக்குற டாஸ்மாக் உள்ள போயிடு ஆளுக்கு ஒரு பீர் அடிச்சிட்டு போடாம வந்தோம்.
அடிச்சா வெயிலுக்கு பீர் வேற ரொம்ப சுகமா இருந்ததாலயும் நேத்து அடிச்சா சரக்கு வேற இன்னும் கண்ணு ஓரத்துல இருந்ததல உடனே கொஞ்சம் போதை அப்படியே மிதமான வானிலை மாதிரி மென்மையா இருந்த்துச்சு. அதோட விட்டோமா வீட்டு உள்ள வந்தஉடனே நேத்து ராத்திரி மிச்சம் இருந்த பிரிட்டிஷ் பிராந்தி ஒரு 90 கட்டிங் இருந்தது ஞாபகம் வந்துச்சு. அத ஆளுக்கு ஒரு சிப்னு  பாட்டில்லோட சேர்த்து அடிச்சுவிட்டோம். பயபுள்ள  ஒரேடியா தூக்கிருச்சு. அப்புறமா சுட சுட சிக்கன் குழம்பு 65 நு அமர்க்களமான  சமையல். BANANA LEAF ல சாப்பிடும் போது என்ன ஒரு சுகம். இந்த மாதிரி சாப்பாடு லாம் வெளியில எங்கேயும் கிடைக்காது (NONVEG ) மட்டும் . இதுல காமெடி என்னன்னா GANESH பாவாவும் சங்கீதாவும் NONVEG sapuduvanga . ஆனா அன்னிக்கு நாங்க samachadha சொல்லவே இல்ல.இப்படியே  குடி, குடி  னு நல்லா எஞ்சாய் பண்ணேன்.

மறுநாள் என்னக்கு கொஞ்சம் வயிறு சரியில்ல. மதியானம் பெங்களூர் கிளம்பலம்புனு decide பண்ணி ரெடி ஆனேன். விவேக், சங்கீதா family யா  வெளியில கிளம்புனாங்க. நான் திருவான்மியூர் ல இருக்குற அக்கா வீட்டுக்கு போய்ட்டு சாயங்காலமா நம்ம தல அஜித் சார் வீட்ட பாக்கலாம்னு  அவர் தெருக்கு போயிடு ராத்திரி KPN ல கிளம்பி பெங்களூர் வந்து சேர்ந்தேன் 







No comments:

Post a Comment