Friday 12 June 2015

பெங்களூரில் ஒரு மழை காலம்

அக்டோபர் 2014:

எனது திருமணத்திற்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் மாத இறுதியில் வந்த weekend இல் நானும் விவேகக்கும் bachelor பார்ட்டியை கொண்டாடின பதிவு இது.

அக்டோபர் 24ம் தேதி வெள்ளிகிழமை ஒரு மழை இரவு ,9.30 மணி அளவில் விவேக் பெங்களூர் வந்தான்  வழக்கம்போல் GEE PEE travels வந்து இறங்கியுடன் நான் பொம்மநஹள்ளியில் அவனுக்காக காத்திருந்தேன். அவன் வண்டியில் இருந்து இறங்கியுடன் நேராக அருகில் உள்ள பிரியாணி கடைக்கு அழைத்து சென்று அவனக்கு பிடித்த starters & பிரியாணியை வாங்கி கொண்டோம். நான் முன்பே நண்பர்களுக்கு பார்ட்டி வைப்பதற்காக வாங்கிவைத்திருந்த BLENDERS PRIDE வீட்டில் இருந்ததால் வெளியில் எதுவும் வாங்கவில்லை.


வழக்கம்போல் நாங்கள் எங்கள் ரூம்மில் வைத்து ஸ்டார்ட் செய்தோம். இரவு 2.00 மணிவரை நாங்கள் இருவரும் பேசினோம் பேசினோம் பேசினோம்.... பேசிக்கொண்டே இருந்தோம். எப்போது தூங்கினோம் என்று தெரிய(வாய்பே)வில்லை !!!
மறுநாள் நான் சீக்கிரமாக எந்திரித்து விட விவேக் மிகநிதானமாக ஒரு 1.30 மணி அளவில் !!! கண்விழித்தான். பெங்களூர் வேறு நல்ல வானிலை. நேற்று அடித்த மழை மற்றும் whisky இரண்டும் சேர்ந்து அவனை தாலாட்டி இருக்கலாம்... 

அன்று கோயம்புத்தூரிலிருந்து எனது தங்கையும் குழந்தைகளும் திருமணத்திற்கு வந்திருந்தனர். அவர்களை ரயில்வே ஸ்டேஷனில்  வரவேற்க நாங்கள் பைக்கை எடுத்து கொண்டு சென்றோம். அவர்களை 
ஆட்டோவில் ஏற்றி அனுப்பிவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என நினைக்கையில் மழை மறுபடியும் ஆரம்பமானது.அதன் பிறகு நடந்தது எல்லாமே எங்கள் வாழ்கையில் நடந்த மிக மிக மகிழ்ச்சியான தருணங்கள். அதை பற்றிய ஒரு பதிவே இது...

இந்த பதிவை எழுதும்போதே மனதில் ஒரு உற்சாகம் வந்துவிடும்.மிதமான மழை, குளிர்ந்த காற்று அற்புதமான வானிலை மனதுக்கு பிடித்த நபருடன் பைக் பயணம் என எல்லா விகிதத்திலும் கலந்த ஒரு பரவச நிலை. அன்று பிடித்த மழையில் நாங்கள் இருவரும் அங்கு இருக்கும் ஆட்டோ கவுன்ட்டரில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்யலாம் என யோசித்தோம். பிறகு கொஞ்சம் மழை விட்டதும் பைக்கை எடுத்து கொண்டு இந்திராநகர் சென்று ஐஸ்வர்யாவை பார்த்து விட்டு செல்லலாமென முடிவு செய்து மழையில் நனைந்து கொண்டே சென்றோம். கப்பன் பார்கை தாண்டும் போது மழை அதிகமானது. வேறு வழியில்லாமல் பைக்கை அங்குள்ள பார்க்கில் நிறுத்தினோம். 




ஒதுங்குவதற்கு அங்கு ஒரே ஒரு ஷெல்ட்டர் இருந்தது. அது அங்குள்ள செக்யூரிட்டி உட்காரும் மிக சிறிய டப்பா. அங்கு நாங்கள் இருவரும் உள்ளே போய் நின்றோம்.(கிழே படத்தை பார்க்க)மழை விடுவதாக இல்லை. மேலும் மேலும் வலுவானது.அந்த சிறிய ஷெல்டெரில்  இருவரும் மழையை ரசித்துக்கொண்டு கமெண்ட்ஸ் பாஸ் பண்ணிக்கொண்டு இருந்தோம். அடாத மழையிலும் மொபைலில் photos  எடுத்துக்கொண்டு அந்த இயற்கையை ரசித்துகொண்டே அடுத்து என்ன செய்யலாம் எங்கு போகலாம் என்ற யோசனையே எங்களுக்கு இல்லை. அந்த சூழ்நிலையிலேயே இருக்க விரும்பினோம். பிறகு 1 மணி நேரத்திற்கு பிறகு மழை விட்டதும் பைக்கை எடுத்துக்கொண்டு இந்திராநகர் சென்றோம். அங்கு ஐஸ்வர்யாவை பார்த்துவிட்டு மழையில் நனைந்து கொண்டே இரவு வீடு வந்தோம். வந்த சிறிது நேரத்தில் மீண்டும் vijaya layout சென்று அங்குள்ள ரெகுலர் பாரில் உடகார்ந்து கொண்டு வோட்கா fuel வங்கி கொண்டு நிதானமாக சரக்கடிதோம். எவ்வளவு நேரம் பேசிக்கொண்டே அடித்தோம் என்பது நினைவில் இல்லை. எங்களுக்கு எந்தவித டார்கெட்ம் இல்லை. எங்களின் ஒரு சில சந்தோஷங்களில் இதுவும் ஒன்று. ஆனால் முக்கியமானதும் கூட !!. இரவு 11.30 மணி அளவில் பார் மூடப்படும் நேரத்தில் சர்வர் வந்து "சார் பார்யை மூட வேண்டும் என்று சொன்ன பிறகுதான் நாங்கள் வெளியிலே வந்தோம் ". அவ்வளவு நேரம் போனதே தெரியாமல் பேசிக்கொண்டே குடித்தோம். ஒரு வழியாக பில்லை செட்டில் செய்து வெளியில் வந்தால் நான் ரொம்ப நேரமாக எதிர்பார்த்து காத்துகொண்டிருந்த தருணம் வந்தது.
"விவேக் அப்போது தனக்கு பிரியாணி இப்பொழுதே வேண்டும் சகோதரா"
(அவன் ஒரு பிரியாணி ரசிகன் . பிரியாணியை பற்றி பேசினாலே உடனே சாப்பிடவேண்டும் என்பான். அதை பற்றி நான் மிக பெரிய பதிவே எழுத வேண்டும். )

சரி என்று நாங்கள் இருவரும் பைக்கை எடுத்து கொண்டு மெயின் ரோடுக்கு சென்றோம். அங்குள்ள SEASON அரபியன் restaurant இல் சென்றோம். நாங்கள் சென்ற பொது அவன் கடையை மூடும் நேரம். நாங்கள் நேராக உள்ளே சென்று பிரியாணி ஆர்டர் செய்தோம். அது பக்கா  அரபியன் ஸ்டைல் உணவகம். நாங்கள் இருந்த மப்பில் வந்த பிரியாணியை ஒருகை பார்த்தோம் 
எப்போது சாப்பிட்டோம் எப்படி வீட்டிற்கு வந்தோம் என்று எதுவுமே எங்களுக்கு தெரியாது. இவ்வாறாக அன்றைய நாளை மிக மிக மகிழ்ச்சியாக கழித்தோம்.

இந்த பதிவை நான் ரசித்து எழுதிய காரணம் என்று பார்த்தால் ஒன்றே ஒன்று தான். வாழ்வில் நடைபெற்ற எதிர்பாராத தருணங்கள் நம் நினைவில் பசுமையாக நிலைத்திருக்க வேண்டும் என்பதுதான். இதை விட அருமையான தருணங்கள் உள்ளன (எ.கா: திருமணம் ....) ஆனால் அதெலாம் பிளான் செய்து நடந்து பதிவு செய்யப்பட்டது . இது போன்ற தருணங்களை பிற்காலத்தில் படிக்கும் போது ஒரு வித சந்தோஷமும் பின்னோக்கிய நினைவுகளும் நம்  மனதில் இருக்கும். எனது டைரி குறிப்பில் இருந்து இதை electronic வடிவில் பதிவேற்றுவது ஒரு வகையில் அழியாமல் இருக்கும் என நம்புகிறேன்


விக்னேஷ்.S 




























No comments:

Post a Comment